பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
அனுப்பர்பாளையம்:திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில், மஹா கும்பாபிஷேக விழா, நாளை (பிப்., 17ல்) நடக்கிறது.இதற்காக, நேற்று (பிப்., 15ல்) அதிகாலை, 5:30 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், துர்கா லட்சுமி சரஸ்வதி ஹோமம் நடந்தது.
அதன்பின், நாதம்பாளையம் பாத விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாலிகை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.விழாவில், நாளை (பிப்., 17ல்)காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள் கோபுர மற்றும் பரிவார மூர்த்திகளின் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.