பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
திருப்பூர்:வேலம்பட்டி கிராமத்தில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.திருப்பூர், வடக்கு அவிநாசிபாளையம், வேலம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவுற்றது. அதன்பின், கும்பாபிஷேக பூஜைள், கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் (பிப்., 14ல்) துவங்கியது.
கோவிலருகே யாகசாலை அமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று (பிப்., 16ல்) காலை மற்றும் மாலையில், இரண்டாம், மூன்றாம் கால பூஜை நடக்கிறது. நாளை (பிப்., 17ல்) அதிகாலை, நிறைவு கால பூஜை நடந்து. காலை, 8:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று (பிப்., 15ல்) பக்தர்கள் தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.