முதுமை பலவீனமானது என்றும், நோயால் தாம் கஷ்டப்படுவதோடு பிள்ளைகளையும் கஷ்டப்படுத்துகிறோம் எனப் பலர் வருந்துகின்றனர். ஆனால் கடவுளை நம்புகிறவர்களுக்கு பலவீனம் அல்ல முதுமை; அது பலம்; சாபம் அல்ல; ஆசீர்வாதம். கவிஞர் டென்னிசன், ’கடலைக் கடத்தல்’ என்னும் கவிதை எழுதிய போது வயது 83. அப்போதும் சிந்தனை சிறகடித்துப் பறந்தது. ’இலியட்’ என்ற காவியத்தை மொழி பெயர்த்த போது, காபெஸ் என்ற அறிஞரின் வயது 88. இவர்களுக்கெல்லாம் வயது ஒரு தடைக்கல்லாக இருந்ததில்லை. ’அனுபவம்’ என்னும் மதிக்க முடியாத செல்வம் நம்மிடம் இருக்கும். வயதை பொருட்டாக எண்ணாதீர்கள். இளைஞன் போல திடமுடன் பணியில் ஈடுபடுங்கள்.