பாக்சிங் போட்டிக்காக களமிறங்க இரண்டு வீரர்கள் தயாராக இருந்தனர். ஒரு வீரன் மற்றொரு வீரனைப் பயமுறுத்தும் விதத்தில் குரல் எழுப்பினான். கோபமுடன் பற்களைக் கடித்தான். எதிரில் நின்றவனோ அமைதி காத்தான். போட்டி துவங்கியதும் கோபக்காரன் அமைதியானவனைக் கடுமையாகத் தாக்கினான்.. ஆனால் நீடிக்கவில்லை. கோபத்தில் சக்தியை இழந்து விட்டான். இந்நிலையில் பொறுமையாக நின்றவன் ஏதும் செய்யாமலேயே வென்றான். பொறுமைக்கு வெற்றி கிடைத்தது. இது போல, சிலுவையில் அறைந்த இயேசுவைச் சோதிக்கும் விதத்தில் முயற்சிகள் நடந்தன. ஆனாலும் தீங்கு செய்வோர் மீதும் இரக்கப்பட்டார்.