பதிவு செய்த நாள்
20
பிப்
2019
02:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதிவுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக, ஏகாம்பரநாதர் பழைய உற்சவர் சிலையை வீதிவுலாவிற்கு பயன்படுத்துவது நிறுத்தப்பட்ட பின், இந்த கோவிலுக்கு ஏகாம்பரநாதர் வருவதும் நின்றது. தொடர்ந்து அக்கோவிலில் உள்ள, அமரேஸ்வரர், அபிராமசுந்தரி, வள்ளி தெய்வானையுடன் முருகன், மஹா கணபதி, சண்டிகேஸ்வர் ஆகிய பஞ்ச மூர்த்திகளை கொண்டு புறப்பாடு நடந்து வருகிறது.நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் அலங்காரத்தில் தனித்தனி வாகனங்களில், சிவ கண மேள தாளங்களுடன் நிமித்தகாரை ஒத்தவாடை தெரு வழியாக, நான்கு ராஜவீதிகள் வழியாக வீதிவுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.