அருப்புக்கோட்டை : எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதில் துன்பப்படும் மனிதன் தீர்வுக்கு, மன அமைதிக்கு கோயில்களை நாடி செல்வது வழக்கம். பிரச்னைகள், சாப நிவர்த்திகள், தோஷங்கள் ஆகியவற்றை அகற்ற பல இடங்களில் விஷேச கோயில்கள் உள்ளன. அந்தவகையில், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் தெப்பத்திற்கு அருகில் அமைந்துள்ள அரசமரத்து பிள்ளையார் விசஷேமானவர். நினைத்ததை நடத்தி தருபவர். நுாற்றாண்டுக்கு மேலாக அமைந்துள்ள அரசமரத்து பிள்ளையாரை பல பகுதிகளில் இருந்து மக்கள் தரிசனம் செய்ய வருவர். அரசமரம் உள்ள இடத்தில் அமைந்துள்ள ராகு, கேது விசஷேமானவர். இதனால், இங்கு தோஷ நிவர்த்திக்கு பெண்கள் அதிகாலையில் குளித்து வழிபட வருவர். பழமை மாறாமல், நுாற்றாண்டு புகழ் வாய்ந்த சாமி சிலைகள் அப்படியே இருப்பதால், மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். நினைத்த காரியம் நடக்கிறது, தோஷங்கள் விலகுவதாகவும் மெய் சிலிர்க்கின்றனர்.