பதிவு செய்த நாள்
23
பிப்
2019
02:02
திண்டிவனம்: திண்டிவனம் வீரபத்ர சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 22ல்) நடந்தது.திண்டிவனம் தேவாங்கர் வீதியில் உள்ள வீரபத்ர சுவாமி கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த 15ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது.
விழாவையொட்டி, 21ம் தேதி விநாயகர் பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (பிப்., 22ல்) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, திவ்ய ஹோமங்கள் நடந்தது.இதன் தொடர்ச்சியாக, காலை 8:45 மணிக்கு, வீரபத்ர சுவாமிக்கு விமான கும்பாபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.