ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2019 01:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் கோயில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க கொடி ஏற்றினார்.
இதில் மார்ச் 4ல் மகா சிவராத்திரியையொட்டி சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை, இரவு வெள்ளி ரதம் வீதி உலா, மார்ச் 5ல் மாசி திருத்தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடக்கும். மார்ச் 6ல் மாசி அமாவாசை யொட்டி சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, பக்தருக்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடக்கும். 12 நாள்கள் நடக்கும் விழாவில் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதி உலா நடக்கும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.