காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்தர் நாயனார் குருபூஜை விழா நடந்தது.மாசி மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர் எறிபத்தர் நாயனார். 63 நாயன்மார்களில் ஒருவர். மழுவை என்ற ஆயுதத்தை, எப்போதும் கையில் வைத்திருந்தவர்.சிவனடியார்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பகைவர்கள் மீது மழுவை ஆயுதத்தை எறிந்து, அடியார்களின் துயரத்தை போக்கியவர். இதனால், எறிபக்தர் என்ற பெயர் ஏற்பட்டது.இவரது குருபூஜை விழா, கச்சபேஸ்வரர் கோவிலில் நடந்தது. எறிபத்தர் நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை, அறுபத்து மூவர் குரு பூஜை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.