பதிவு செய்த நாள்
25
பிப்
2019
01:02
செங்கல்பட்டு : வெண்பாக்கம் கிராம குண்டலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, வெண்பாக்கம் கிராமத்தில், யோகாம்பிகை சமேத குண்டலீஸ்வரர் கோவில் உள்ளது.இதன் வளாகத்தில், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரஹம், நந்தி பெருமானுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன.கடந்த, ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணி, சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, 22ம் தேதி, கணபதி உட்பட, பல பூஜைகள் நடந்தன.நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகளுக்கு பின், கலசங்கள் புறப்பாடு முடிந்து, காலை, 9:25 மணிக்கு, அனைத்து கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், குண்டலீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.