பதிவு செய்த நாள்
25
பிப்
2019
01:02
நகரி : சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, சிந்தலப்பேட்டை கிராமத்தில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து. நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, 8:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து, மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் அணிவித்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கும்பாபிஷேகத்தை, நகரி, வெங்கடபிரசாத் அர்ச்சகர் தலைமையில், அர்ச்சகர் குழுவினர் நடத்தி வைத்தனர். இதில், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.