பதிவு செய்த நாள்
25
பிப்
2019
01:02
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமியை வழிபட, பக்தர்கள் நடைப்பயணமாக சென்றனர்.திருப்போரூர் அடுத்த, ராயமங்கலம் கிராம முருகன் வழிபாட்டு பக்தர்கள், 100க்கும் மேற்பட்டோர், ஆண்டுதோறும், மயில்தோகை காவடிகளுடன், 13 கி.மீ., நடைப்பயணம் மேற்கொண்டு, கூட்டு பிரார்த்தனைக்காக, கந்தசுவாமி கோவிலுக்கு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, மாசி சஷ்டி நாளில், காவடிகளுடன் புறப்பட்ட அவர்கள், கொட்டமேடு, செம்பாக்கம், மடையத்துார் வழியாக, திருப்போரூர் கோவிலுக்கு வந்தனர்.கந்தசுவாமி முன், மயில் தோகை காவடிகளை வைத்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனை செய்தனர்.