திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர், தெர்ப்பசயன ராமர், சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பரமக்குடி) ராமசாமி, ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல்அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன், ஓம் சக்தி வாரவழிபாட்டுக்குழுவினர்கள், தேவஸ்தான ஊழியர்களால் உண்டியல் தொகை எண்ணப்பட்டது. ஆண்டிற்கு இருமுறை உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். உண்டியலில் 7 லட்சத்து 94 ஆயிரத்து 182 ரூபாய் காணிக்கையாக வரப்பெற்றது.