மூன்றாம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல் பரிபாடல். இதில் 70 பாடல்கள் இருந்தன. முருகப்பெருமானைப் பற்றி 31 பாடல்களும், திருமாலைப்பற்றி 8 பாடல்களும், காளியைப் பற்றிய ஒரு பாடலும், வைகை நதியைப்பற்றி 26 பாடல்களும், மதுரை நகரைப் பற்றி 4 பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நமக்குக்கிடைத்தது 22 பாடல்கள்தான். இதில் திருமாலைக்குறித்து 6 பாடல்களும், முருகன் குறித்து 8-ம், வைகையைப்பற்றி 8-ம் மட்டுமே உள்ளன.