பதிவு செய்த நாள்
27
பிப்
2019
12:02
வாலாஜாபாத்:திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில், மார்ச், 4ல், சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, மார்ச், 4ல், மஹா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
இரவு, 8:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால பூஜையுடன், விழா நிறைவு பெறுகிறது.அதேபோல, படுநெல்லி சந்திரமவுலீஸ் வரர் கோவில், கோவிந்தவாடி கைலாசநாதர் கோவில், வாலாஜாபாத் அருணாச்சலேஸ்வரர் உட்பட, பல சிவன் கோவில்களில், சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.