பதிவு செய்த நாள்
27
பிப்
2019
12:02
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் உண்டியலில், 92.32 லட்சம் ரூபாய் ரொக்கமும், 1,178 கிராம் தங்கம், 7,781 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
மேலும், பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை, மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த வகையில், 34 நாட்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி மற்றும் திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர், ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.பின், கோவில் ஊழியர்கள் மற்றும் சேவாதி பக்தர்களால் எண்ணப்பட்டது. இதில், 92 லட்சத்து, 32 ஆயிரத்து, 713 ரூபாய் ரொக்கம், 1,178 கிராம் தங்கம் மற்றும், 7,781 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.