பதிவு செய்த நாள்
28
பிப்
2019
11:02
அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில், ஆப்பக்கூடல் செல்லும் சாலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, அழகுமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதத்தில், தேர்திருவிழாவுடன், குண்டம் விழாவும் நடக்கும்.
இந்த ஆண்டு திருவிழா, கடந்த, 13ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, நடந்தது. இதில், அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றிய பகுதி மக்கள், நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கினர். இன்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன், தேர்திருவிழா நிறைவடைகிறது.
இதேபோல், ஈரோடு பி,பெ., அக்ரஹாரம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. பயபக்தியுடன் குண்டம் இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.