பதிவு செய்த நாள்
28
பிப்
2019
11:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி புளியம்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண விழா நடந்தது. கோவிலில், கடந்த, 19ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
24ம் தேதி தீர்த்தம் கொண்டு வருதல், 26ம் தேதி அம்மன் அழைத்தல், சக்தி கும்பம் கொண்டு வருதல் நடந்தது.நேற்று, (27ம் தேதி) காலை, 5:00 மணிக்கு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டு சீர் கொண்டு வரப்பட்டு, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.தொடர்ந்து, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. கும்ப ஸ்தாபனம் கங்கையில் விடப்பட்டது. இன்று, மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதியுலா, அபிஷேக ஆராதனையுடன் திருவிழா நிறைவடைகிறது.