பதிவு செய்த நாள்
01
மார்
2019
12:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதன் துவக்கமாக இன்று (மார்ச் 1) பூச்சொரிதல் விழா நடக்கிறது.
முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி மார்ச் 12 இரவு காப்புக்கட்டுதல், மறுநாள் (மார்ச் 13) காலையில் கொடியேற்றம், இரவு பூதகி வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்லக்கு, அன்ன, ரிஷப, யானை, சிங்க, காமதேனு, குதிரை வாகனங்களில் அருள்பாலிப்பர். நான்காம் நாள் விழாவாக மார்ச் 16ல் வண்டிமாகாளி உற்ஸவம், மார்ச் 21 காலை, மாலை அக்னிச்சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின்சார தீப அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் வலம் வருவார். மறுநாள் (மார்ச் 22) அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் கள்ளர் கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். அன்று இரவு கொடியிறக்கமும், மார்ச் 23 காலை 4:00 மணி துவங்கி பகல் 10:00 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்த பின், அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.