ஆன்மிக நிகழ்வுகளில் பூஜைகள் செய்வதற்கு கும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கும்பம் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப கண்கவரும் அலங்கார கும்பமாக மாறி வருகிறது.
பலவிதமான கலை பொருட்களை தயாரிக்கும் மதுரை கைவினைக் கலைஞர் தேவிபிரியா கூறுகையில் "வீட்டுக்குள் வீணாக பொழுது போக்க விரும்பாமல் எனக்குள் இருக்கும் கலை திறமைக்கு வடிவம் கொடுத்து அதன் மூலம் சுயதொழில் செய்கிறேன்.தாமிரம், பித்தளை எவர் சில்வர் சொம்புகளை அப்படியே கும்பமாக பயன்படுத்தாமல் அதன் மேல் டிசைனர் கற்கள், பாசிகள் வைத்து அலங்கரித்து பூஜையில் வைத்தால் அழகாக இருக்கும் என தோன்றியது. பின், சில அலங்கார சொம்புகளை உருவாக்கி உறவினர், நண்பர்கள் வீட்டில் விசேஷங் களுக்கு கொடுத்தேன். அந்த கும்பங்கள் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
இது தவிர ஆரத்தி தட்டு, சுவாமி சிலை அலங்காரம், பரதம் ஆடும் குழந்தைகளுக்கு மேக்கப் என நானே பல கலைகளை கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். பாரம்பரிய பெருமை பேசும் பலர் இதற்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அதனால் மேலும் சில புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. ஒவ்வொரு பெண்களும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தினால் வீட்டில் இருந்தே சாதிக்கலாம் என்றார். இவரை பாராட்ட 95855 57964.