மதுரை:மதுரை டோக்நகர் 7வது குறுக்குத்தெரு சின்மயா மிஷன் குருதட்சிணாமூர்த்தி சன்னதியில் மார்ச் 4ல் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு 7:00 முதல் 7:30 மணி வரை ஆஸ்தீக சபை வேத பாராயணம், இரவு 7:30 முதல் 12:00 மணி வரை சின்மயா தேவி குழுவினர் மற்றும் பாலவிகார் குழந்தைகளின் தேவார இன்னிசை, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. புல்லூத்து தபோவனம் சர்வேஸ்வரர் கோயிலில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை மகா சிவராத்திரி அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.