Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையில் அய்யா வைகுண்டர் அவதார ... தென்காசி மந்தமாரியம்மன் கோயில் கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருவிழா மார்ச் 4ல் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2012
11:03

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா 4ம் தேதி ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா தொடர்ந்து 16 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வரும் நான்காம் தேதி இரவு ஏழு மணிக்கு கொடியேற்றுடன் துவங்குகிறது. 19ம் தேதி வரை விழா தொடர்ந்து நடக்கிறது. திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நடக்கவுள்ள விழாவின், ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று மாலை ஐந்து மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன், திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் தொட்டு இழுக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை துவக்கியுள்ளது. கோவிலை சுற்றி சிண்டேக்ஸ் டேங்குகள் வைத்து 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. சுகாதார பணிகளுக்காக கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். வெயிலின் தாக்கம் மற்றும் புழுதி புயலை கட்டுப்படுத்தும் விதமாக, கோவிலை சுற்றி டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதென மாவட்ட போலீஸ் துறை முடிவுசெய்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar