பதிவு செய்த நாள்
04
மார்
2019
03:03
அரூர்: பிரதோஷத்தையொட்டி, அரூரில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று (மார்ச்., 3ல்) நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மேலும், நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன.
இதில், பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், பக்தர்களுக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.