பதிவு செய்த நாள்
05
மார்
2019
02:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். இதில், விரதம் இருந்த பக்தர்கள், மார்க்கெட் ரோடு பகுதியில் இருந்து, அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி கிரேனில், பறவைக்காவடி எடுத்து, வெங்கட்ரமணன் வீதி, பஸ் ஸ்டாண்ட், பாலக்காடு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். சப்பரத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, 5ம் தேதி இரவு அபிஷேகம்; 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்; இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு நேரத்தில் தேரோட்டம் நடக்கிறது.