நெல்லிக்குப்பம் நடனபாதேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2019 03:03
நெல்லிக்குப்பம்: ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவராத் திரியை முன்னிட்டு, கலசங்கள் மற்றும் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு, கலசங்கள் மற்றும் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பிறகு நடனபாதேஸ்வரருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.நெல்லிக்குப்பத்தில் பூலோகம் கைலாயம் சிவலோகம் ஆகிய மூன்று லோகத்துக்கான கைலாசநாதர் பூலோகநாதர் வெள்ளபாக்கம் சிவலோகநாதர் கோவில்கள் உள்ளன. மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் இந்த மூன்று கோவில் களுக்கும் சென்று தரிசனம் செய்தனர்.
மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.