Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி ஆலங்குப்பம் கோவிலில் ... சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரண்டப்பள்ளி வனப்பகுதியை கோதண்ட ராமர் சிலை கடப்பதில் சிக்கல்
எழுத்தின் அளவு:
பேரண்டப்பள்ளி வனப்பகுதியை கோதண்ட ராமர் சிலை கடப்பதில் சிக்கல்

பதிவு செய்த நாள்

05 மார்
2019
04:03

ஓசூர்: தற்காலிக சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்காததால், பேரண்டப்பள்ளி வனப்பகுதியை, கோதண்டராமர் சிலை ஏற்றிய லாரி கடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஈஜிபுராவில், 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் கல் வெட்டி எடுக்கப்பட்டு, கோதண்டராமர் முகம், இரு கைகள் வடிவமைக்கப்பட்டன. கடந்த நவ., 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு, கர்நாடகாவுக்கு கோதண்டராமர் சிலை புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதிக்கு, கடந்த ஜன., 16ல், கோதண்டராமர் சிலை வந்தது.

பல்வேறு தடைகளுக்கு பின், கடந்த மாதம், 8ல், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையை அடைந்த லாரி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. சிலை கொண்டு செல்ல ஏதுவாக, அங்குள்ள சின்னாற்றின் குறுக்கே, தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. ஆனால், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தை கடக்க, வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் வனப்பகுதியில், 100 மீட்டர் துாரத்துக்கு சாலை அமைக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரிகளுடன், சிலை அமைப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், 8 முதல், நேற்று வரை, 24 நாட்களாக, ஒரே இடத்தில், கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘உரிய அனுமதி கிடைத்த பின், சாமல்பள்ளத்தில் இருந்து, கோதண்டராமர் சிலையை ஏற்றிச் செல்லும் லாரி புறப்படும்’ என, சிலை அமைப்பாளர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar