பதிவு செய்த நாள்
05
மார்
2019
03:03
புதுச்சேரி: ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது.புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாயான கொள்ளை விழா, கடந்த 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 3ல்) மதியம் 1.00 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல், பொங்கல் இடும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (மார்ச்., 4ல்) காலை 11:30 மணிக்கு, பக்தர்களுக்கு பால், தயிர், மஞ்சள் பொடி, இளநீர், எலுமிச்சை மற்றும் மிளகாய் சாந்து ஆகியவற்றால் அபிஷேகம் நடந்ததது.மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜை, இரவு 8:00 மணிக்கு சிவன், பார்வதி வேடம் அணிந்து வீதி உலா நடந்தது. மயான கொள்ளை விழா நாளை 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.