பதிவு செய்த நாள்
06
மார்
2019
12:03
அவிநாசி: கிறிஸ்தவர்களின், தவக்காலம், இன்று, சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. ஏசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்து, சிலுவையில் அறையப்பட்டு, 3-ம் நாள் உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடப்படுகிறது. அடுத்த மாதம், 21ம் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் தினத்துக்கு முன், 40 நாட்கள் தவக்காலம், அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று, சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்குகிறது. இதற்காக, அனைத்து தேவாலயங்களிலும், காலை மற்றும் மாலையில், சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
தேவாலயங்களில், அனைவரது நெற்றியிலும், சாம்பல் பூசப்படும். பின், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடக்கும். மேற்கொண்ட தவ முயற்சியை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, ஈஸ்டர் பெருநாளில், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.