வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2019 12:03
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், 23ம் ஆண்டு மயான கொள்ளை பிரம்மோற்சவம் துவங்கியது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் துலுக்கானத்தம்மன், அங்காள பரமேஸ்வரியம்மன், வழிமாரியம்மன், வேதவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 23ம் ஆண்டு மாசி மாத பிரம்மோற்சவ மயான கொள்ளை உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, காப்பு கட்டுதல், சக்தி கரக உற்சவத்தை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சாகை வார்த்தலும், மாலை 6;00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. இரவு அம்பாள் பனைத்தேரில் வீதியுலா நடந்தது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதியுலா நடக்கிறது.11ம் தேதி, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 2:30 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்பாள் வம்பகீரப்பாளையம் சன்னியாசித்தோப்பில் எழுந்தருள, மயானகொள்ளை நடக்கிறது.