சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2019 02:03
தியாகதுருகம்:சித்தலூர் பெரியநாயகி அம்மன் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தியாகதுருகம் அடுத்த சித்தலூர் மணிமுக்தா ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் மாசித் திருவிழா நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து காப்பு கட்டி கொடியேற்றப் பட்டது.
தொடர்ந்து, தினமும் உற்சவர் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை மயான கொள்ளையும்; 13ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.