விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2019 02:03
விழுப்புரம்:விழுப்புரம் பூந்தோட்டம் பகுதி மேல்வன்னியர் வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 23ம் ஆண்டு மயான கொள்ளை விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று (மார்ச்., 5ல்) காலை 7:30 மணிக்கு, மகா ஹோமம், 8:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.9.00 மணிக்கு அங்காளம்மனுக்கு மகா அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 5:00 மணிக்கு மயானகொள்ளை விழாவும், இரவு 7.00 மணிக்கு விநாயகர், வீரபத்திரர், அம்மன் வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடு களை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.