பதிவு செய்த நாள்
06
மார்
2019
02:03
ஈரோடு: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவர்களின், 40 நாள் தவக்காலம் இன்று (மார்ச்., 6ல்) துவங்குகிறது. உலக அளவில் கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஏப்.,14ல் குருத்தோலை ஞாயிறு, 18ல் புனித வியாழன், 19ல் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்.,21ல் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பாக, 40 நாட்கள் உபவாசம் கடைபிடிப்பது வழக்கம். இதை தவக்காலம் என்பர். இத்தவக்காலம் இன்று (மார்ச்., 6ல்) துவங்குகிறது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஆர்.சி., மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில், சாம்பல் புதன் இன்று (மார்ச்., 6ல்) அனுசரிக்கப்படுகிறது.