கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஊ.மங்கலம் சுடலை காளியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தீமிதி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக நேற்று (மார்ச்., 6ல்) காலை 9:00 மணிக்கு காளியம்மனுக்கு சீர்கொண்டு வருதல் நிகழ்ச்சி, காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 7:00 மணியளவில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது.