பதிவு செய்த நாள்
08
மார்
2019
12:03
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் பிரம்மோற்சவம், மார்ச், 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, இரவு, வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருத்தேரில், பெருமாள் எழுந்தருளினார். பின், காலை, 8:40 மணிக்கு, தேரை வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்தனர். மாட வீதிகளை சுற்றி, காலை, 10:00 மணிக்கு, தேர் நிலையை சென்றடைந்தது.