கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையத்தில் அம்மன் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழா நடந்தது.அதனையொட்டி, கடந்த 1ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நேற்று முன்தினம் (மார்ச்., 6ல்) நடந்தது.
தொடர்ந்து நேற்று (மார்ச்., 7ல்) காலை அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாலை 6:00 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.