உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் (மார்ச்., 6ல்) காலை 10:30 மணி அளவில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் யாக குண்டத்தில் மந்திரங்கள் முழங்க மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் நடந்தது.தொடர்ந்து, பல்வேறு பழ வகைகள், புடவை போன்றவைகள் யாக குண்டத்தில் கொட்டப்பட்டு யாகம் நடந்தது. யாகத்தையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.