கண்டாச்சிபுரம்:விழுப்புரம் அடுத்த கெடார் சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனையொட்டி, நேற்று (மார்ச்., 7ல்) காலை 7:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு மேல் கொடியேற்றும் நிகழ்ச்சியும், வீரவாகு தேவர்களுக்கு திருக்காப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும்; இரவு சுவாமி விதியுலாவும் நடந்தது. வரும் 12ம் தேதி கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், சூரசம்ஹாரத் திருவிழாவும் மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.