பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
தேவிபட்டினம்:சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் நாளை மார்ச் 9, 10 (சனி, ஞாயிறு) தேதிகளில்மாசிக்களரி பாரிவேட்டை உற்ஸவ விழா நடக்கிறது.
இங்குள்ள உதிரமுடைய அய்யனார் சமேத பூர்ண புஷ்கலா தேவி, முத்துவிநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர்,லாட சன்னியாசி, பைரவர், உடையநாயக்கத்தேவர், நல்லசேவுகப் பெருமாள், காளியம்மன், ராக்காச்சியம்மன்,கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 7:00 மணிக்கு அத்தியூத்து பிள்ளையார் கோயிலில் இருந்து கோயில் கரகம் முன்னே செல்ல நேர்த்திக்கடன நடக்கிறது.
பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி, காவடி எடுக்க உள்ளனர். இரவில் கலைநிகழ்ச்சிகளும், மறுநாள் கோயில் முன்புறம் உலக நன்மைக்கான கூட்டுப்பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும, சொர்ண அலங்கார தரிசனமும் நடக்கிறது.
* இங்கு தமிழ்மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 முதல் பகல் 12:30 மணிவரை லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையும், மாங்கல்ய பூஜையும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர்,திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.