பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
அந்தியூர்: அந்தியூர் அருகே, ஓசைபட்டி மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்து வருகிறது. கடந்த மாதம், 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம், நேற்று (மார்ச்., 7ல்) நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அந்தியூர், முனியப்பன்பாளையம், ஆப்பக்கூடல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள், விழாவில் திரளாக கலந்து கொண்டனர். இன்று (மார்ச்., 8ல்) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. வரும், 13ல் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.