பதிவு செய்த நாள்
09
மார்
2019
01:03
நாமக்கல்: நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவில் திருத்தேர் விழா, வரும், 22ல் நடக்கிறது. நாமக்கல்லில் நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. பங்குனியில், தேர்த்திருவிழா நடக்கும். இந்தாண்டு விழா, வரும், 14ல் துவங்குகிறது. தினமும் காலை, 8:00 மணிக்கு, நரசிம்மர் கோவிலில் இருந்து, நரசிம்மர் சுவாமி மற்றும் அரங்கநாதர் சுவாமிகள் பல்லக்கில் திருவீதி சென்று அருள்பாலிப்பர். அதேபோல், இரவு, 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். மார்ச், 20ல் திருமாங்கல்ய தாரணம், தொடர்ந்து பக்தர்கள் மொய் சமர்ப்பித்தல், மறுநாள் இரவு, குதிரை வாகனத்தில் உற்சவம் நடக்கிறது. 22 காலை, 8:30 மணிக்கு, நரசிம்மசுவாமி திருத்தேர் வடம் பிடித்தலும், மாலை, 4:30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ரமேஷ், தக்கார் வெங்கடேஷ் உள்பட பலர் செய்து வருகின்றனர்.