செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா நடைபெற உள்ளது.அங்காளம்மன் கோவிலில் 13 நாள் நடைபெறும் மாசி திருத்தேர் உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி மயான கொள்ளை நடந்தது. ஐந்தாம் நாள் விழாவாக இன்று தீமிதி விழா நடைபெற உள்ளது.அதனையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்கின்றனர். மாலை 3:00 மணிக்கு தீ மீதி விழா நடக்கிறது.பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.