புதுச்சேரி: புதுச்சேரி வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில், நம்பெருமாள் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு சார்பில் திருவாசக முற்றோதல் ஞானப்பெரு வேள்வி விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, சிவ கலியபெருமாள் தலைமை தாங்கி, திருவாசக முற்றோதல் ஞானப் பெரு வேள்வியை நடத்தினர். இதில், திருவாசகத்தை உணர்ந்து ஓதுவதால், குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம், திருமணத் தடை, குடும்பத்தில் சிக்கல், தொழிலில் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் இருந்து முன்னேற்றம் அடையலாம்.இவ்விழாவில், நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.