பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
கமுதி:கமுதி அருகே காடமங்களம் காளியம்மன் கோவில் மாசிக்களரி திருவிழா மார்ச் 6 ல், காப்புக் கட்டுதலுடன் துவங்கி, தொடர்ந்து 5 நாட்கள் நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், விஷேச பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காடமங்களம் கிராம பொதுமக்கள் சார்பாக மாநில அளவிலான கிடா முட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, உசிலம்பட்டி, ராஜபாளையம், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலிருந்து 150 கிடாக்கள் பங்கேற்றன. கிடா முட்டு போட்டியில் வெற்றி பெற்ற கிடா உரிமையாளர்களுக்கு, பீரோ, கட்டில், சைக்கிள், பித்தளை அண்டா, குத்து விளக்கு உட்பட பல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்சி ஏற்பாடுகளை காடமங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.