Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆன்மிக ... கோவை கோதண்டராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் சிறப்பு பூஜை கோவை கோதண்டராமசாமி கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் பகல் பத்து மூன்றாம் நாள்; சவுரிகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் பகல் பத்து மூன்றாம் நாள்; சவுரிகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி

பதிவு செய்த நாள்

22 டிச
2025
10:12

திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியாளி்ததார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா வருடம் தோறும் 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முதல் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா  கடந்த 19ம் தேதி   திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதற்கு அடுத்து பகல் பத்து உற்சவம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,


திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும்  பகல்பத்து திருநாளின் 3-ம் நாளான இன்று காலை நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் கலிங்கத்துராய், ரத்ன அபய ஹஸ்தம், ரத்தின காதுகாப்பு, முத்துச்சரம் பவள மாலை, பருத்திக்காய் காசு மாலை, அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் சூடியபடி தங்க பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அர்ஜுன மண்டபத்தில் அரையர்கள் அபிநயத்தோடு இசைத்த திவ்ய பிரபந்தத்தின் தீந்தமிழ் திரு மொழி பாசுரங்களை கேட்டவாறு பக்தர்களுக்கு சேவை சாதித்த பின்னர் நம்பெருமாள்,  இன்று மாலை  மூலஸ்தானம் சென்று அடைகிறார்.  வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar