கோவை கோதண்டராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2025 10:12
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக காலை 6.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை,மகா சங்கல்பம் நடந்தன. தொடர்ந்து மகன் யாசஜெபம், ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம், கோ பூஜை.ஸ்ரீ ருத்ர ஹோமம், வசோர்தாரை. தம்பதி பூஜை, கலசாபிஷேகம், நிறைவாக மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எந்த பக்தி எது என்ற தலைப்பில் அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதையை டாக்டர் ரகுநாத்தாஸ் மகராஜ் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக சஞ்சீவி பஜன் மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இந்த நிகழ்வானது கோதண்டராமசாமி கோவிலில் அமைந்துள்ள மண்டபத்தில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.