கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2019 12:03
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
ஊரணி பொங்கல், பாரத சொற்பொழிவு நிகழ்ச்சியுடன் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தி அம்மன் திருவீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் மயானத்தில் காட்டேரி ஊர் சுற்றுதல், பகல் 12:00 மணிக்கு சுவாமி மயானம் சென்று கொள்ளையிடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து வீதியுலா உற்சவத்திற்கு பின் மதியம் 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருத்தேரில் அமர்வித்தல் வைபவம் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு காளி கோட்டை இடித்தலுக்கு பின், 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது.