திருக்கோவிலுார் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2019 02:03
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்களுக்கு நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 16ம் தேதி இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 20ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.விழா நாட்களில் தினசரி காலை, மாலை இரு வேலையும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடும், விசஷே திருமஞ்சனம், பஜனை, சொற்பொழிவுகள் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.