பதிவு செய்த நாள்
14
மார்
2019
01:03
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு மாட வீதி வழியே ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மயான கொள்ளை திருவிழா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும், கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.பெண்கள் பொங்கலிட்டு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியும், பக்தர்கள் முடி காணிக்கை வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் வரதம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.