திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா மூன்றாம் நாளான நேற்று பெருமாள் தங்க பல்லக்கில் வீதியுலாவும், தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளி வானமாமலை ஜீயர் மடத்தில் மண்டகப்படி நடந்தது. மாலை 5:00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வாண வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை இரவு பெருமாள் கருடசேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.