கடலுார்:புதுப்பாளையம் ருக்மணி, பாமா சமேத ராஜகோபால சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலுார் புதுப்பாளையம் ருக்மணி, பாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் ரோஹிணி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு சஹஸ்ர நாம அர்ச்சனை மற்றும் உற்சவர் சுவாமி கோவிலில் உள்புறப்பாடு நடந்தது. இதில், ருக்மணி, பாமா சமேத ராஜகோபால சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.